top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

2 ஆயிரம் மில்லியன் மணிநேரத்தை சமூக வலைத் தளங்களில் செலவிட்ட மக்கள்!!

Updated: May 13, 2023

இன்ஸ்ரகிராம் - ரிக்ரொக்

பேஸ் புக் முன்னணியில்!!

உலகெங்கும் அன்ட்ரொயிட்(Android) தொலைபேசிப் பாவனையாளர்கள் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் (social media) செலவிட்ட மொத்த

நேரம் இரண்டு ட்ரில்லியன் (trillion) அல்லது 2ஆயிரம் மில்லியன் மணித்தியாலங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டை விடவும் 17 வீதம் அதிகம் ஆகும்.


தொலைபேசிப் பாவனையாளர்களது

தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. நாளாந்தம் ஒருவர் சராசரி ஐந்து மணித்தியாலங்களை சமூக வலைத் தளங்களில் செலவிட்டுள்ளார். அதிலும் இன்ஸ்ரகிராம், ரிக்ரொக் பேஸ் புக் ஆகிய மூன்றும் முதலிடத்தில்

இருந்துள்ளன.


தொலைபேசித் தரவுகளின் படி பிரான்ஸில் கடந்த ஆண்டு 2.13 பில்லியன் புதிய செயலிகள் (new application) தரவிறக்கம்(downloaded)

செய்யப்பட்டுள்ளன. அவற்றில் வட்ஸ்அப் (WhatsApp) ரிக்ரொக்(TikTok)

மற்றும் டொக்ரொலிப் (Doctolib) ஆகியவை அதிகம் ஆகும். வயதின் அடிப்படையில், 18-24 வயதினர் இன்ஸ்ரகிராம், சினப்சற், நெட்ஃபிலிக்ஸ் (Instagram, Snapchat, Netflix) ஆகியவற்றையும் 25-44 வயதுப் பிரிவினர் வட்ஸ்அப், பேஸ்புக், மெஸஞ்சர் (WhatsApp, Facebook, Messenger.ஆகியவற்றையும் 45 வயதுக்கு மேற்பட்டோர் தூஅன்ரிகோவிட், வேய்ஸ், ம-பாங் (TousAntiCovid, Waze, MaBanque) போன்ற செயலிகளையும் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


தாஸ்நியூஸ் - பாரிஸ்

19-01-2023

0 comments

Comments


You can support my work

bottom of page