top of page
Post: Blog2_Post

அபூர்வ சூரிய கிரகணம் பல மில்லியன் பேர் கண்டு வியப்பு!!


கனடா, அமெரிக்கா

மெக்ஸிக்கோவில்

பட்டப்பகலில் இருள்


கலவரமடைந்த விலங்குகள்


பாரிஸ், ஏப்ரல் 8


அமெரிக்காவின் டாலாஸ் உயிரியல் பூங்காவில் ஒட்டகச் சிவிங்கிகள் உட்பட விலங்குகள் கலவரமடைந்து அங்கும் இங்கும் ஓடுகின்ற காட்சிகளைத் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.


வழமைக்கு மாறான வானியல் நிகழ்வு

சில நிமிட நேரம் பட்டப்பகலை இரவாக்கியதை அடுத்தே இவ்வாறு பறவைகளும் விலங்குகளும் குழப்பமடைந்தன என்று அறிவிக்கப்படுகிறது.


வட அமெரிக்காவில் பல மில்லியன் பேர் மிக அரிதாகத் தோன்றுகின்ற பூரண சூரிய கிரகணக் காட்சிகளைக்

கண்டு வியந்திருக்கின்றனர். மெக்ஸிக்கோவின் மேற்குக் கரையில்

தொடங்கி அமெரிக்காவின் 14 மாநிலங்களைக் கடந்து கனடாவின் கிழக்கு வரை சூரிய கிரகணம் நீடித்தது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வருகின்ற

அபூர்வமான இந்த வான்வெளி நிகழ்வை அமெரிக்காவின் சிஎன்என் உட்பட பல உலகத் தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பின.


பாரிஸ் நேரப்படி இன்று மாலை ஏழு மணி முதல் கிரகணம் தொடங்கியது.

சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கின்ற சந்தர்ப்பம் சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது. அமெரிக்க நகரங்களில் லட்சக்கணக்கானவர்கள்

வீதிகளுக்கு வந்தும் கூரைகளில் நின்றும் வெட்ட வெளிகளில் திரண்டும் சூரிய கிரகணத்தைக் கண்டு ஆர்ப்பரித்தனர். கனடா மக்களுக்கு இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதால்

கிரகணம் பார்ப்பதற்காக மில்லியன் கணக்கானோர் முன்னாயத்தங்களுடன்

காத்திருந்தனர். பிரதமர் ஜஸ்டின் ரூடோ

வும் அவர்களில் ஒருவர்.

கனடாவின் ஒட்டாவாவில் பகுதியாகத் தென்பட்ட சூரிய கிரகணத்தை பிரதமர் ரூடோ பார்ப்பதைக் காட்டும் ரொய்ட்டர் செய்திப் படம்.

 

சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்குப் பாதுகாப்பான முறை எது என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இந்த அரிதான காட்சியைப் பார்வையிட வசதியாகச் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வெளியே அனுமதிக்கப்பட்டனர். தொழில் இடங்களில் இருந்தும் பணியாளர்கள் வெளியே வந்தனர்.


இதன்காரணமாக அமெரிக்க நகரங்களில் சிறிதுநேரம் ஸ்தம்பித நிலை காணப்பட்டது. ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் ரஸ்ஸல்வில் நகரில் சுமார் 300 ஜோடிகள் கிரகண வேளையில் திருமணம் செய்துகொண்டனர் என்று உள்ளர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-04-2024





0 comments

Comments


You can support my work

bottom of page