top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

அமெரிக்காவின் "தாட்" ஏவுகணை எதிர்ப்புக் கவசம் இஸ்ரேலுக்கு!

போர்ச் சூழ்நிலைக்கு

முழு அளவில் தயார்!!

ஈரான் அரசு அறிவிப்பு

. நா.படையை விலக்குமாறு

கோருகின்றார் நத்தன்யாகு


பாரிஸ், ஒக்ரோபர் 13


அமெரிக்கா அதன் அதிதிறன் வாய்ந்த தாட் (Terminal High-Altitude Area Defense - Thaad) ஏவுகணை எதிர்ப்புக் கவச வசதியை இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கிறது. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்தே

இந்த வான் பாதுகாப்பு வசதியை வழங்குமாறு பென்டகனுக்கு ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேல் மீது கடந்த ஒக்ரோபர் முதலாம் திகதி ஈரான் சுமார் 200 பாலிஸ்ரிக் ஏவுகணைகளைப் பொழிந்து தாக்கியிருந்தது. அதில் பெரும்பாலானவற்றைத் தடுத்து அழித்து விட்ட போதிலும் அவற்றில் சில

நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளைத் தாக்கியிருந்தன.

ஈரானியத் தாக்குதலக்குத் தனது பதிலடி என்ன என்பதை இஸ்ரேல் இன்னமும் தெரிவிக்கவில்லை. ஆயினும் அது"மிகக் கடுமையான - துல்லியமான - ஆச்சரியமளிக்கும் வகையிலானதாக இருக்கும்" என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். இஸ்ரேலின் எந்த விதமான தாக்குதலுக்கும் பதிலளிக்காமல் விடப்போவதிவில்லை

என்று ஈரான் மீண்டும் கூறியிருக்கிறது.

படம் :ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி..


இதேவேளை -


ஒரு போருக்கான முழுமையான ஆயத்த நிலையில் இருக்கிறோம். ஆனாலும் போரை நாங்கள் விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறோம் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) கூறியிருக்கிறார். முழு அளவிலான போரைத் தவிர்க்க இப்போதுவரை முயற்சித்து வருகின்றம்.ஆயினும் போருக்கான ஆயத்த நிலையிலும் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் - லெபனானின் தெற்கே நிலைகொண்டுள்ள ஐ. நா. அமைதிகாக்கும் படைகளை அங்கிருந்து அகற்றிக்கொள்ளுமாறு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு ஐ. நா.செயலாளர் நாயகத்திடம் கேட்டிருக்கிறார்.


நாற்பது நாடுகளது படையினர் அங்கம் வகிக்கின்ற இந்த அமைதிப்படை மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வீரர்கள் காயமடைய நேரிட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் நடத்திவரும் இந்தத் தாக்குதல்களுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதேசமயம் லெபனானில் செஞ்சிலுவைச் சங்க வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-10-2024




0 comments

Comments


You can support my work

bottom of page