ஜனாதிபதி மாளிகைக்குள் குடும்பமாக வந்தவர் செவ்வி
உள்ளே நடக்கும் கூத்துக்கள்
உலக ஊடகங்கள் விவரிப்பு!
"எனது வாழ்வில் நான் இதுபோன்ற இடத்தைக் கண்டதில்லை. நாங்கள் வருந்திக்கொண்டிருந்த போது அவர்கள் மிகச் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். இதனை என் பிள்ளைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் காண்பிக்க விரும்புகிறேன்."
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கியுள்ளோரில்
61 வயதான பி. எம். சந்திரவதி என்பவர் மேற்கண்டவாறு ரொய்ட்டர்
செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். கைக்குட்டைகளை விற்கும் சிறு வியாபாரியான அவர்
தனது மகள், பேரப் பிள்ளைகள் சகிதம் மாளிகையின் முதலாவது தளத்தில் தங்கியுள்ளார் என்கிறது
ரொய்ட்டர்.
சிறிலங்கா அதிபர் மாளிகைக்குள் கடந்த 24 மணிநேரத்துக்கும் அதிகமாகத் தங்கியிருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே இருந்தவாறு புரியும் கூத்துக்களை
உலக செய்தி ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
உக்ரைன் போர்ச்செய்திகளைத்
தாண்டி கொழும்பு நிலைவரம் உலகெங்கும் தலைப்புச் செய்திகளாக முதலிடம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் பிரிட்டிஷ்
காலனித்துவ கால அடையாளங்களில் ஒன்றாகிய ஜனாதிபதி மாளிகைக்குள் தங்கியி
ருப்போர் கோட்டாபய ராஜபக்ச புதன் கிழமை பதவி விலகும் வரை
அங்கிருந்து அகலப்போவதில்லை
என்று அறிவித்திருக்கின்றனர்.
மாளிகையின் சொகுசு சோபாக்களில் படுத்துறங்கும் இளைஞர்கள் பலர், தொலைக்காட்சி பார்ப்பதையும்
பெரும் எடுப்பில் சமையல் செய்வதையும் காணொலிகள்
காட்டுகின்றன. நீய்ச்சல் தடாகத்தில்
குளிப்பது முதல் பியானோ வசிப்பது
வரை அங்கு நடப்பவற்றை ஊடகங்கள் விவரிக்கின்றன.
மாளிகையின் சந்து பொந்து எங்கும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். விரும்பியதைச்
செய்து மகிழ்கின்றனர். சிங்களப் பொப் இசைப்பாடல்கள் உள்ளே ஒலிக்கின்றன. "வாக்குறுதி அளித்தபடி கோட்டாபய புதன்கிழமை பதவி விலகாது போனால் தினமும் இந்த மாளிகையில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ளேன்" - என்று 26 வயதான குமார என்பவர் கூறியிருக்கிறார். "உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் காண்பதற்காக நீண்ட தூரத்தில் இருந்து இங்கு வந்திருக்கிறேன். இது போன்ற இடத்துக்கு வருவது
என்பது ஒரு கனவு"-என்று மற்றொரு இளைஞர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் பலர் ஒன்றாக ஜனாதிபதியின் படுக்கையில் உறங்கும் படத்தை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபயவின் உள்ளாடைகள் எனக் கூறப்படும் அங்கிகள் இளைஞர்களால் காண்பிக்கப்பட்ட தகவலையும்
சர்வதேச ஊடகங்கள் சில தவிர்க்
காமல் வெளியிட்டுள்ளன.
ஒரு நாட்டின் அதிபர் மாளிகைக்குள் இதற்கு முன்பு நிகழந்திராத பல சம்பவங்களின் காட்சிகள் அடங்கிய காணொலிகள் உலகெங்கும் பகிரப்பட்டு வருகின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சகல வயதினரும் மாளிகைக்கு உள்ளே காணப்படுகின்றனர்.
கடைசியாக வெளியாகிய ஒரு வீடியோ ஜனாதிபதி அங்கு கூட்டங்களை நடத்தும் மாநாட்டு மண்டபத்தில் பதிவு செய்யப்பட்டிருக்
கிறது. அங்கு சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதுகளது கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவது போன்ற
போலியான - கேலியான-கூட்டம்
ஆர்ப்பாட்டக்காரர்களால் நடத்தப்படுகிறது. வெள்ளை இனத் தோற்றத்திலும் ஒருவர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
-இப்படி ஏகப்பட்ட கூத்துக்கள் உள்ளே அரங்கேறிவருகின்றன.
அதேசமயம் ஜனாதிபதியும் பிரதமரும் விலகிச் சென்றுவிட்டால் நாங்கள் எதிர்பார்க்கும் அமைதி திரும்பி விடுமா, நம் வாழ்வு நிலைமை மேம்பட்டுவிடுமா என்ற பெரும் கேள்வியையும் சிலர் ஊடகங்களிடம் தெரிவிக்கத் தவறவில்லை.
10-07-2022 தாஸ்நியூஸ் - பாரிஸ்.
Comments