top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஈரான் எல்லைக்குள் படைத்தளம் அருகே ட்ரோன்கள் வெடிப்பு!


விமான நிலையங்கள்

மூடப்பட்டன! பதற்றம்!!


பாரிஸ், ஏப்ரல் 19


ஈரானுக்கு உள்ளே மிகத் தொலைவில்

இஸ்ஃபஹான்(Isfahan) என்ற இடத்தில் அமைந்துள்ள முக்கிய படைத்தளம் அருகே ட்ரோன்கள் வெடித்துள்ளன

என்று செய்திகள் வருகின்றன. இஸ்ரேலியப் படைகள் அந்தத் தளத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளன என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் இன்று அதிகாலை (பாரிஸ் நேரம்) முதல் அறிவித்திருக்கின்றன.


இது தொடர்பாக இஸ்ரேல் உடனடியாகக் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஆனால்,

ஈரானிய மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால்

இஸ்ரேலிய ஏவுகணைகள் அந்தத் தளத்தைத் தாக்கின என்று வெளியான தகவல்களை ஈரான் மறுத்துள்ளது. மூன்று இஸ்ரேலிய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு பெரும் வெடிப்பு ஓசைகள் கேட்டுள்ளன. அவை இஸ்ரேலிய ட்ரோன்களைத் தடுப்பதற்காகத் தனது வான் பாதுகாப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதால் ஏற்பட்டவை என்றும் ஈரானியத் தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது.


ஈரானிய நகரங்கள் பலவற்றின் மேலாக விமானப் பறப்புகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. எனினும் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் வான் சேவைகள் நிறுத்தப்பபட்டுச் சிறிது நேரத்தில் மீளத் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .


கடந்த சனிக்கிழமை இரவிரவாக இஸ்ரேல் மீது பொழிந்து நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடி கிடைக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ள நிலையில் அதை எதிர்பார்த்து ஈரான் முழுவதும் முழு உஷார் நிலை பேணப்பட்டு வருகிறது.


🔴மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

19-04-2024








0 comments

Comments


You can support my work

bottom of page