top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

உணவகங்களின் வெளி இருக்கைகள் நள்ளிரவு வரை இயங்கலாம்

ஒலிம்பிக் காலம்

முழுவதும் அனுமதி


ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற சமயத்தில் பாரிஸ் நகர உணவகங்கள் தங்களது கோடைகால வெளி இருக்கை

களை நள்ளிரவு 12 மணிவரை திறந்து வைத்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.


ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற ஜுலை முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை உணவகங்களுக்கு இந்த விசேட அனுமதி வழங்கப்படவுள்ளது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.


பாரிஸ் நகரசபையின் வேண்டுகோளின்பேரில்

கோடைகால வெளி இருக்கைகள் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முதல் இரவு பத்து மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆயினும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக வரவிருக்கின்ற பத்து லட்சத்துக்கு மேற்பட்ட உல்லாசப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் இரவிரவாக நகரில்

நடமாடுவர் என்பதால் விடிய விடிய உணவகங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


கொரோனா பெருந்தொற்றுநோய்க் காலத்தில் உணவகங்களுக்கு வெளியே நடைபாதை ஓரமாகவும் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் தங்களது வெளி இருக்கைகளை அமைப்பதற்கு உரிமையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறை இப்போது ஒரு வழக்கமாக மாறிப் பிரபலமாகியிருக்கிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

16-03-2024





0 comments

Comments


You can support my work

bottom of page