top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஒலிம்பிக் தீபம் பாரிஸ் வருகின்றது.. வீதி வரவேற்பில் ஈழத் தமிழர்களும் பங்கேற்கின்றனர்

நகரில் எங்கெங்கு

கடந்து செல்லும்..?


பாரிஸ், ஜூலை, 12


ஒலிம்பிக் தீப்பந்தம் அதன் நீண்ட மரதன் அஞ்சலோட்டத்தை நிறைவு செய்துகொண்டு ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை தலைநகரை வந்தடையவுள்ளது. நாட்டின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்ற அன்றைய தினத்தில் ஒலிம்பிக் தீபமும்

நகருக்குள் பிரவேசிக்க இருக்கிறது.


பாரிஸ் நகரில் அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமையும் மறுநாள் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் தீப்பந்தம் பல வீதிகள் ஊடாகச்சுமந்து செல்லப்படும். நாளாந்தம் சுமார் 120 பேர் தீப்பந்தத்தை எடுத்துச் செல்வர். பாரிஸ் வாசிகள் அதனைப் பார்வையிட முடியும். அதற்காக வீதிகளில் உரிய ஒழுங்குகள் பின்பற்றப்படும்.


தீப் பந்தம் பாரிஸ் நகரின் இருபது நிர்வாகப் பிரிவுகளில் (arrondissement) ஒற்றை இலக்கத்தில் வரும் பிரிவுகளுக்கு ஊடாகவும் 20 ஆவது நிர்வாகப் பிரிவின் சில இடங்களுடாகவும் செல்லும். தலைநகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பண்பாட்டு மையங்கள், விளையாட்டுத்தளங்கள் போன்ற முக்கிய பகுதிகளை அது கடந்து செல்லும் போது மக்கள் வீதிகளின் இரு புறமும் திரண்டு வரவேற்பர்.

பாரிஸ் புறநகரங்களில் ஜூலை 26 ஆம் திகதியே தீப்பந்தப் பவனியின் முக்கிய கட்டம் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறும் இடத்தை வந்தடைய முன்னர் தீப்பந்தம்

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற புற நகர்ப் பகுதிகளூடாக எடுத்துவரப்படவுள்ளது. ஒலிம்பிக் தீப்பந்தத்தை சுமந்து செல்லவுள்ள பல நூற்றுக்கணக்கான பாரிஸ் வாசிகளில் ஈழத் தமிழர் ஒருவரும் அடங்குகிறார். கடந்த வருடம் மிகச் சிறந்த பிரெஞ்சுப் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று

நாட்டின் அதிபரது வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகிக்கின்ற பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா 

(Tharshan Selvarajah) என்பவர்

பாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவோரில் ஒருவராகத் தெரிவாகி இருந்த செய்தி வாசகர்கள் அறிந்ததே. அதனால் தீப்பந்தப் பவானியை வரவேற்கின்ற நிகழ்வுகளில் பாரிஸ் வாழ் தமிழர்களும் உற்சாகத்துடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.


தலைநகரில் இரண்டு தினங்களும் தீப் பந்தம் கடந்து செல்ல இருக்கின்ற இடங்கள், நேரம் என்பன ஒரே பார்வையில் - (பிரெஞ்சு மொழியில்)


ஜூலை 14


🔵12h50 : Rond-point des Champs-Elysées (8e)


🔴13h : Petit Palais (8e)


⚪13h25 : Assemblée Nationale - Place du Palais Bourbon (7e)


🔵13h40 : Saint-Germain-des-Prés - Boulevard Saint-Germain (6e)


🔴14h10 : Sénat - Jardin du Luxembourg (6e)


⚪14h30 : Place du Panthéon (6e)


🔵14h50 : Place de la Sorbonne (5e)


🔴15h35 : Parvis de l’Institut du Monde Arabe (5e)


🔵15h50 : Île de la Cité - Parvis Notre-Dame (Paris Centre)


⚪15h55 : Pont Notre-Dame (Paris Centre)


🔴16h15 : Place Monique Antoine (Paris Centre)


🔵16h20 : Musée Carnavalet - Rue des Francs Bourgeois (Paris Centre)


⚪16h35 : Place des Vosges - Maison Victor Hugo (Paris Centre)


🔴17h10 : Place de la Bastille (Paris Centre)


🔴17h50 : Paris Plages - Quai de Jemmapes (10e)


🔵18h10 : Jardin Marielle Franco - Rue d’Alsace (10e)


🔴18h50 : Place du Colonel Fabien (10e)


⚪19h05 : Rue des Martyrs - Place Lino Ventura (9e)


🔴19h25 : Olympia - Boulevard des Capucines (9e)


🔵19h50 : Place Vendôme (Paris Centre)


🔵20h : Rue de Rivoli (Paris Centre)


🔴20h20 : Louvre - Pyramide du Louvre (Paris Centre)


⚪21h30 : Esplanade de la Samaritaine (Paris Centre)


🔴21h50 : Jardin Nelson Mandela (Paris Centre)


⚪22h50 : Parvis du centre Pompidou (Paris Centre)


🔵23h : Parvis de l'Hôtel de Ville (Paris Centre)


ஜூலை 15


🔴8h10 : Arène Porte de la Chapelle - Rue de la Chapelle (18e)


⚪9h00 : Montmartre - Parvis du Sacré Cœur (18e)


🔵9h20 : Place Blanche (18e)


🔴10h30 : Jardin Solitude - Place du Général Catroux (17e)


⚪ 11h00 : Arc de Triomphe - Place de l'Etoile (8e)


🔴11h45 : Place du Trocadéro (16e)


🔵 13h35 : Île aux Cygnes (15e)


🔴14h15 : Cour de l'Hôtel de Ville du XVe siècle


🔵 14h40 : Rue de Vaugirard (15e)


⚪15h00 : Place de Catalunya (14e)


⚪15h15 : Place Denfert Rochereau (14e)


🔴 15h40 : Quartier de la Butte-aux-Cailles (13e)


🔵15h50 : Parc des Buttes-Chaumont (19e) (Deuxième flamme)


🔴16h30 : Boulevard Vincent Auriol (13e)


⚪17h00 : Port de l’Arsenal – Passerelle Mornay (12e)


⚪ 18h10 : Boulevard de la Bastille (12e)


🔴18h15 : Place Léon Blum (11e)


🔵18h18 : Place de la Bastille (Paris Centre)


🔴18h50 : Place Edith Piaf (20e)


⚪19h15 : Rue de Belleville (19e)


🔵20h45 : Place de la République (10e)


🟨தொடர்புடைய செய்திகள் :



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

12-07-2024

0 comments

Comentarios


You can support my work

bottom of page