நாடெங்கும் வெப்ப அனல்
பாரிஸ் பிராந்தியத்துக்கும்
"செம்மஞ்சள்" எச்சரிக்கை!
பாரிஸ், ஓகஸ்ட் 11
கோலாகலமும் ஆச்சரியங்களும் அடங்கிய நிறைவு விழாவுடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் முதற் பாகம்
முடிவுக்கு வருகிறது. பாரிஸ் புறநகரில்
Stade de France உதைபந்தாட்ட அரங்கில் இன்னும் சிறிது நேரத்தில் நிறைவு விழா தொடங்கவுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜூலை 26 ஆம் திகதி செய்ன் நதியில் நடந்த தொடக்க விழா முழுவதையும் விடாது பெய்த மழை நனைத்திருந்தது. இன்று கடும் வெயில் மற்றும் வெப்ப அலைக்கு மத்தியில் நிறைவு விழா நடக்கிறது. குறுகிய நாட்களில் இருவேறுபட்ட பருவநிலைகள்.
உற்சாகம், உணர்ச்சி, மகிழ்ச்சி, பிரமிப்பு எனக் கழிந்த இரண்டுவாரகாலத்தின்
முடிவில் இன்று நடக்கவிருக்கின்ற
நிறைவு விழாவில் என்னென்ன அதிசயங்கள் நிகழப்போகின்றன என்பதை அறிவதற்கு நாட்டு மக்கள் தயாராகியுள்ளனர்.
கோடை கால ஒலிம்பிக்கின் இரண்டாவது பகுதியான பரா ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பித்து செப்ரெம்பர் 8வரை நடக்க இருக்கின்றன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. கனிகுல் (Canicule) என்கின்ற காண்டாவன வெப்ப அனல் நாளை திங்கட்கிழமை
பாரிஸ் பிராந்தியத்திலும் கடுமையாக உணரப்படலாம் என்று வானிலை மையமாகிய'மெத்தியோ பிரான்ஸ்' (Météo-France) அதன் இறுதி நிலைவர அறிக்கையில் எச்சரித்துள்ளது.
பாரிஸ் இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் உட்பட 45 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அவை வருமாறு :Landes, Gironde, Charente-Maritime, Charente, Corse-du-Sud, Haute-Corse, Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Bouches-du-Rhône, Vaucluse, Gard, Drôme, Ardèche, Isère, Savoie, Haute-Savoie, Rhône, Loire, Puy-de-Dôme, Doubs, Jura, Ain, Saône-et-Loire, Allier, Côte-d'Or, Yonne, Loiret, Loir-et-Cher, Eure-et-Loir, Aube, Marne, Aisne, Oise, Yvelines, Val-d'Oise, Essonne, Val-de-Marne, Seine-et-Marne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Paris, , Nièvre, Cher, Indre et Indre-et-Loire.
🟡முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/ஞ-ய-ற-இரவ-ப-ர-ஸ-ஒல-ம-ப-க-க-ன-ந-ற-வ-வ-ழ-எப-பட-நடக-க-ம
தாஸ்நியூஸ் - பாரிஸ்
11-08-2024
Комментарии