top of page
Post: Blog2_Post

கனடா ஒட்டாவா நகரில் அதிர்ச்சி! இலங்கையரது வீட்டில் படுகொலைகள்! தாய், 4 பிள்ளைகள் உட்பட அறுவரது உடல்கள் மீட்பு!

Updated: Mar 8

தந்தையார் படுகாயம்


இளம் மாணவன் புரிந்த

கொலை வெறியாட்டம்!!


கனடா தலைநகர் ஒட்டாவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கூட்டுக் குடும்பப் படுகொலைச் சம்பவம் ஒன்றில் தாய் மற்றும் இரண்டு மாதக் குழந்தை உட்பட ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தந்தையார் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் என்று

தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கோரப் படுகொலைகளைப் புரிந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


ஒட்டாவாவின் புறநகராகிய Barrhaven

என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிலேயே

சடலங்கள் காணப்பட்டன. கனடா

நேரப்படி புதன்கிழமை இரவு பத்துப் பதினொரு மணியளவில் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன.


கொல்லப்பட்டவர்களில் வளர்ந்தவர்கள் இருவரும் இலங்கையின் பூர்வீகப் பிரஜைகள் என்பதை ஒட்டாவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கனடா செய்தி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்தக் குடும்பத்தினர் இலங்கையில் இருந்து மிக அண்மைக்காலத்திலேயே கனடாவில் குடியேறியவர்கள் என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.


நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தப் படுகொலைகள் தொடர்பாக

ஒட்டாவா தலைமைப் பொலீஸ் அதிகாரி எரிக் ஸ்ரப்ஸ் (Eric Stubbs) செய்தியாளர்களுக்கு வெளியிட்ட தகவல்களின்படி -


⚫தாயாரான 35 வயதான தர்ஷானி ஏகநாயக்கா (Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake) -


⚫ஏழு வயதான இனுகா விக்கிரமசிங்க (Inuka Wickramasinghe) -


⚫நான்கு வயது மகளாகிய அஷ்வினி விக்கிரமசிங்க(Ashwini Wickramasinghe) -


⚫இரண்டு வயதான ரின்யானா விக்கிரமசிங்க (Rinyana Wickramasinghe) -


⚫இரண்டு மாதக் குழந்தையான கெல்லி விக்கிரமசிங்க (Kelly Wickramasinghe) -


⚫மற்றும் நாற்பது வயதுடைய அமரக்கோன் (Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) -


-ஆகியோரே கூரான ஆயுதம் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.


தர்ஷானியின் கணவர் ஏகநாயக்கா படுகாயங்களுடன் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குடும்பத்தவர்களைக் கோரமாகச் வெட்டிகொன்றவர் என நம்பப்படும் 19 வயதான ஃபெப்ரியோ டி சொய்ஸா (Febrio De-Zoysa) என்ற மாணவனைச் சம்பவம் நடந்த இடத்தில் வைத்துப் பொலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரும் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார்.

அந்த மாணவனுக்கும் கொலையுண்ட குடும்பத்தினருக்கும் இடையே என்ன உறவு முறை என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. மாணவர் வீஸாவில் கனடாவுக்கு வந்த அவர் அந்தக் குடும்பத்தினரது வீட்டில் தங்கி வசித்து வந்தவர் என்று கூறப்படுகிறது.


நகரின் வரலாற்றிலேயே மிக மோசமான படுகொலை இது என்று ஒட்டாவா நகர முதல்வர் துயரம் வெளியிட்டிருக்கிறார். அதேசமயம் பிரதமர் ஜஸ்டின் ரூடோ விடுத்துள்ள ஒரு செய்தியில் ஒட்டாவாப் படுகொலைகளை "அதிர்ச்சி!.. கொடுமை!! " என்று வர்ணித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களது சமூகத்தினருக்குச் சகல வழிகளிலும் உதவுமாறு அவர் கேட்டிருக்கிறார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

07-03-2024
















0 comments

Commenti


You can support my work

bottom of page