top of page
Post: Blog2_Post

"செய்ன் நதியில் நீந்துவேன்..."! மக்ரோன் உறுதி

ஒலிம்பிக் கிராமத்

திறப்பு விழாவில்

அவரே தெரிவிப்பு


பாரிஸ், மார்ச் 1


"செய்ன் நதியில் நிச்சயமாக நீந்துவேன். எப்போது என்று ஒரு திகதியை உங்களுக்கு இப்போது சொல்லமாட்டேன்.."


-அரசுத் தலைவர் மக்ரோன் செய்தியாளர்களிடம் இவ்வாறு நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார்.


அவரது இந்தக் கூற்று 1990 களில் ஜாக்

சிராக்கின் நிறைவேறாத விருப்பத்தை நினைவு படுத்துவதாக செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பாரிஸ் நகரை ஊடறுக்கின்ற இந்த நதியைத் தூர்வாரித் துப்புரவு செய்து அதில் நகர வாசிகள் நீச்சல் அடிக்கின்ற வசதிகள்

செய்யப்பட வேண்டும் என்று பாரிஸ் மேயராக இருந்த சமயம் முன்னாள் அதிபர் ஜாக் சிராக் விரும்பியிருந்தார். ஆனால் அந்த விருப்பம் அவரது காலத்தில் நிறைவேறவில்லை. இப்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக

செய்ன் நதி தூய்மையாக்கப்பட்டுள்ளது. நீச்சல் போட்டிகளை நதியில் நடத்துவதற்குத்

திட்டமிடப்பட்டுள்ளது.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து செய்ன் நதியின் சில பகுதிகளில் நகர மக்கள் நீந்துவதற்கு அடுத்த ஆண்டு முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது. நீச்சலுக்கான இடங்களை நகரசபை ஏற்கனவே அறிவித்திருப்பது தெரிந்ததே.

படம் :பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தின் குடியிருப்புக் கட்டடங்களின் ஒரு தோற்றம்

 

ஒலிம்பிக் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ஈழத் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய Seine-Saint-Denis இல் கடந்த ஏழு ஆண்டுகளாக நிர்மாணித்து முடிக்கப்பட்ட ஒலிம்பிக் கிராமத்தை

(Olympic village) அதிபர் மக்ரோன் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அங்கு செய்தியாளர்களது கேள்விகள் பலவற்றுக்குப் பதிலளித்தார். அச்சமயத்திலேயே நதியில் நீந்துவேன் என்று அவர் வாக்குறுதி வழங்கினார். பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோவும் செய்ன் நதியில் நீந்தும் விருப்பத்தை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்.


பாரிஸ் நகருக்கு வடக்கே Saint-Ouen, Saint-Denis மற்றும், L'Ile-Saint-Denis

பகுதிகளை உள்ளடக்கிய 52 ஹெக்டேர் பரப்பில் ஒலிம்பிக் கிராமம் நிறுவப்பட்டுள்ளது. நாற்பது கட்டடங்கள் அடங்கிய தொகுதியில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் 19 ஆயிரம் பேர் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான உணவு, பொழுதுபோக்கு வசதிகள் என்பனவும் அதில் அடங்கும்.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

01-03-2024

0 comments

Comments


You can support my work

bottom of page