top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

சிறிலங்கா நாடாளுமன்றம் நள்ளிரவு கலைப்பு நவம்பர் 14 தேர்தல்

ஒக்ரோபர் 4 முதல்

வேட்புமனுக்கள் ஏற்பு


பாரிஸ், செப்ரெம்பர் 24


சிறிலங்காவின் நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் அனுர குமார திஸநாயக்கா, அதிவிசேட அரசிதழ் (Extraordinary Gazette notification) ஒன்றின் மூலம் இதற்கான உத்தரவை விடுத்திருக்கிறார்.


புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி

நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும்.


சிறிலங்கா ஜனநாயக சோசலிஸக் குடியரசின் அரசமைப்பின் 70 ஆவது பிரிவின் கீழ் அதிபருக்குள்ள அதிகாரத்தின் படி அனுர குமார நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்கும் உத்தரவை விடுத்துள்ளார். பதவிக்கு வந்தால் நாடாளுமன்றத்தை உடனே கலைத்து பொதுத் தேர்தலுக்கு உததரவிடுவேன் என்று தேர்தல் பரப்புரைகளின்போது அவர் மக்களுக்கு உறுதுமொழி அளித்திருந்தார்.


அரச அச்சகத் திணைக்களம் வெளியிட்ட அரசிதழில்,

ஒக்ரோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான நாட்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படம் :Harini Amarasuriya


சே குவாரா, பிடல் காஸ்ரோ போன்ற தலைவர்களது கொள்கைகளைப் பின்பற்றிய புரட்சிகர இயக்கம் ஒன்றின் உறுப்பினரான இடதுசாரி அரசியல்வாதி அனுர குமார திஸநாயக்கா, சிறிலங்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றிருப்பது தெரிந்ததே. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக நேற்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அவர் இன்றைய தினம் சூட்டோடு சூடாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டிருக்கிறார். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக் கட்சிக்கூட்டணிக்கு மூன்றே மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர்.


நேற்றுத் திங்கட்கிழமை பதவியேற்ற அனுர குமார, இன்று கல்வியியலாளரும் ஒரேயொரு தடவை மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தவருமாகிய ஹரிணி அமரசூரியவைப் (Harini Amarasuriya) புதிய பிரதமராக நியமித்துள்ளார். நாட்டின் பிரதமர் பதவியில் அமர்கின்ற மூன்றாவது பெண் அவராவார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

24-09-2024

0 comments

Comments


You can support my work

bottom of page