உலகின் பல பகுதிகளில்
இன்று மே 18 நிகழ்வுகள்
பாரிஸ், மே 17
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகமாகிய அனேஸ் கலமார் (Agnès Callamard) தனது தென்னாசியப் பயணத்தின் ஒரு கட்டமாக முல்லைத்தீவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று மே 18 ஆம் திகதி அங்கு நடந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து
அவரும் மலரஞ்சலி செலுத்தினார்.
பிரான்ஸை சேர்ந்தவரான அனேஸ் கலமார் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை தென் ஆசியப் பிராந்தியத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலையுண்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்லவுள்ள அவர் அங்கு பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருகின்ற மே18 நினைவு வைபவத்தில் கலந்து கொண்டார் என்று என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களது உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்களது பிரதிநிதிகள் ஆகியோருடனும் செயலாளர் நாயகம்
கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்
என்று அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மே 18 நாளை நினைவுகூருகின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இன்றைய தினம் உலகின் பல பாகங்களிலும் நடைபெறவுள்ளன.
பாரிஸில் தமிழர்கள் பங்கேற்கவுள்ள
மே 18 நாள் பேரணி நகரின்
ரிப்பப்ளிக் சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
18-05-2024
Komentar