top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஜேர்மனியில் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சிப் பிரமுகர் மீது கத்தி வெட்டு!

சமூக ஊடகங்களில்

நேரடிக்காட்சி வைரல்


பாரிஸ், மே 31


ஜேர்மனியின் தென் மேற்குப் பகுதியில் மான்ஹெய்ம் (Mannheim)

என்ற நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் குறைந்தது மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


அங்குள்ள சந்தைப் பகுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்

இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.


தாக்குதலாளி நபர் ஒருவரைக் கத்தியால் தாக்குவதையும் பின்னர் அங்கு வந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்துவதையும் காட்டுகின்ற வீடியோ யூரியூப் தளத்தில் நேரலையாக வெளியாகியுள்ளது. அந்தக் காட்சிகள் பின்னர் சமூக ஊடகங்கள் பலவற்றில் வைரலாகப் பகிரப்பட்டிருக்கின்றன.

தாக்குதலுக்கு இலக்கான மூவரில் ஒருவர் தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புவாதச் செயற்பாட்டாளர் என்று

தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலீஸ் அதிகாரி ஒருவரும் கத்தி வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர் மீது பொலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திக் அவரைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

தீவிர வலதுசாரி செயற்பாட்டாளராகிய

மிச்செல் எஸ்ரூசென்பேகர் (Michael Stürzenberger) சம்பவம் நடந்த இடத்தில் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அச்சமயம் அங்கு கத்தியுடன் வந்த நபர் ஒருவரே முதலில் அவரைத் தாக்கினார் என்று தெரிவிக்கபபடுகிறது.


58 வயதான மிச்செல் எஸ்ரூசென்பேகர் ஜேர்மனி இஸ்லாமியமயமாக மாறுவதை எதிர்ப்பதாகக் கூறி அதற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருபவர் என்று ஜேர்மனிய செய்தி

ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.


தாக்குதல் நடத்திய நபரது பின்னணி தொடர்பான விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


(படங்கள் :Bild செய்திச் சேவை)

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-05-2024


0 comments

Comentarios


You can support my work

bottom of page