top of page
Post: Blog2_Post
Writer's pictureKarthigesu Vasuki

ஜூலை 29 மழை!

பென்சில்வேனிய அதிசயம்!!


இன்று,ஜூலை 29, தேசிய மழை தினமாக ஐக்கிய அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.

1800களின் பிற்பகுதியில் வில்லியம் அலிசன் என்ற மருந்தாளர் ஆண்டு தோறும் ஜூலை 29 ம் திகதி தனது மருந்தகப் பிரதேசத்தில் மழை பெய்வதை அவதானித்தார்..இவருக்கு உள்ளூர் விவசாயி ஒருவரே இந்த அவதானத்தை தெரியப்படுத்தியிருந்தார்..

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வானியாவில் பிரதான தெருவான வேனர்ஸ்பேர்க் என்ற இடத்தில் அவரது மருந்தகம் அமைந்திருந்தது.

மழை பெய்யும் நாள் பற்றிய தனது அவதானிப்பை அலிசன் தொடர்ச்சியாக 20 வருடங்களாக பதிவு செய்து வந்தார்..

அவரைத் தொடர்ந்து அவரது சகோதரரும் இதை அவதானித்து பதிவு செய்து வந்தார்.

இந்த விசித்திரமான மழை அவதானிப்பை கேள்விப்பட்ட Byron daily என்ற நாளிதழும் இந்த அவதானிப்பை ஆவணப்படுத்த தொடங்கியது.

இதன் அடிப்படையில் 1930 களில் பென்சில்வியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் John O Hara எழுதிய மழை தொடர்பான கதைகள் பிரபல்யம் அடைந்தன.

இந்தக் கதைகள் வருடாந்தம் ஜூலை 29 ம் திகதி வேர்னஸ்பேர்க்கில் மழை பொழிகின்ற செய்தியை உலகின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்றன.

படம்:இன்றைய நாளின் Weynerburg Pennsylvania வானிலை

 

தற்போது அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளிலும் ஜூலை 29 மழை நாளாக உள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் உள்ளவர்கள் நேரில் சென்றோ அல்லது தொலைபேசி போன்ற ஊடகங்கள் மூலமோ அன்றைய தினம் மழை பெய்ததா என்பதை ஆவலோடு அறிந்து கொள்கிறார்கள்!!


 

தாஸ் நியூஸ்-பரிஸ்

29/07/2024

0 comments

Comments


You can support my work

bottom of page