top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

துப்பாக்கியை பறித்து பொலீஸாரைச் சுட்டு காயப்படுத்திய நபர்!

பாரிஸ் -13 பிரிவுக்கான

பொலீஸ் நிலையத்தில்

நேற்று இரவு சம்பவம்


பாரிஸ், மே 10


பாரிஸ் - 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப் படுகாயமடைந்துள்ளனர்.


பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில் வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப் பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

10-05-2024





0 comments

Comments


You can support my work

bottom of page