top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாதுகாப்புக்காக பச்சைப் பெட்டிகள் இடமாற்றப்படுமா?

ஒலிம்பிக் விழாவுக்காக

புத்தகப் பெட்டகங்களை

அகற்றுவதற்கு எதிர்ப்பு!

சுமார் 450 வருடங்களுக்கு மேலாக பாரிஸ் செய்ன் நதிக் கரைக் கட்டுகளில்

அமைந்திருக்கின்ற பாரம்பரிய புத்தகப் பெட்டகங்கள் (பெட்டிக் கடைகள்) ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்காக அங்கிருந்து அகற்றப்படுமா?


ஒலிம்பிக் காலப் பகுதியில் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பழைய புத்தகக் கடைகளை அங்கிருந்து பெயர்த்து வேறு ஒர் இடத்துக்கு மாற்றுகின்ற அறிவிப்பைப் பாரிஸ் பொலிஸ் தலைமையகம் விடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


2024 பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் கோலாகலத் தொடக்க விழா செய்ன் நதியில் - திறந்த வெளியில் - தண்ணீரின் மேலே படகுகளில் - நடத்தப்பட இருப்பது தெரிந்ததே. அதனைக் கண்டு களிப்பதற்காக உலகெங்கும் இருந்து பல பத்து லட்சம் ரசிகர்கள் பாரிஸ் நகரில் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மிகச் சவாலான பாதுகாப்புப் பணிகள் இப்போதிருந்தே திட்டமிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு கட்டமாக

தொடக்க விழாப் பகுதியில் - நதிக்கட்டுகளில் - நீண்ட வரிசையில் காணப்படும் புத்தகக் கடைகளை அங்கருந்து தற்காலிகமாக வேறு ஓர் பகுதிக்குக் கொண்டு சென்று நிறுவ பாரிஸ் நகர சபை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. புத்தகக் கடைகளை இயக்கிவருவோருக்கு அது தொடர்பான முன்னறிவித்தல் விடுக்கப்பட்டதை அடுத்து

கடைகளை அங்கிருந்து இடம்மாற்றும் திட்டத்துக்கு அவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பாரிஸ் நகரின் மையத்தில் செய்ன் நதிக் கரையோரம் நடப்பவர்கள் இருபுறமும் நதிக்கரைக் கட்டுகளில்

பச்சை வர்ணப் பெட்டகங்களை

வரிசையில் காணமுடியும். அவை "Bouquinistes" என்று அழைக்கப்படுகின்ற

பழைய புத்தக விற்பனையாளர்களது

நடைபாதைக் கடைகள். இன்று நேற்று

அல்ல. ஐந்து நூற்றாண்டுகளாக அந்தக்

கடைகள் அதேஇடத்தில் நகரின்

பிரிக்க முடியாத ஒர் அடையாளமாக

இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன.


செய்ன் நதி "புத்தக அலுமாரிகளுக்கு

இடையே ஓடுகின்ற உலகின் ஒரே நதி" என்று அழைக்கப்படுவதற்கு இந்தப் பழைய புத்தகக்கடைகளே காரணமாகும்.யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் உலக அளவில் பாரம்பரியம் மிக்க இடங்களில் (World Heritage Site) ஒன்றாக அடையாளப்படுத்

தப்படும் இந்த நடைபாதைக் கடைகள் அமைந்துள்ள கரையோரங்களில் கால் பதிப்பதை உல்லாசப் பயணிகள்

பெருமையாகக் கருதுகின்றனர்.

நொத்-டாம் மாதா கோவில் (Notre-Dame Cathedral) போன்ற நகரின் புராதன சின்னங்கள் பல அமைந்திருக்கின்ற

பகுதியில் சுமார் மூன்று கிலோ மீற்றர்கள் நீளத்துக்குப் புத்தகப் பெட்டகங்களை வரிசையில்

காணலாம். முத்திரைகள்,தபால் வாழ்த்து அட்டைகள், நினைவுப்பொருள்கள், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள் பழைய பத்திரிகைகள் உட்பட அரிய இலக்கிய நூல்கள் அடங்கலாக மூன்று லட்சம் பழைய புத்தகங்கள் நூற்றுக்க ணக்கான மரப்பெட்டிகளில் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடைபாதைக் கடைகளை நடத்து

வோர் சாதாரணமான வியாபாரிகளைப்

போலன்றி மிகவும் சுதந்திரமானவர்

கள். கடைகளுக்கு வாடகை எதனையும்

செலுத்தவேண்டியதில்லை.சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை கடையைத் திறந்துவைத்திருக்கலாம். வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் திறந்திருக்க வேண்டும் என்பது உட்பட ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகளை மாத்திரமே நகர நிர்வாகம் விதித்திருக்

கிறது.

வருமானம் கருதிய தொழிலாக அன்றி வழிவழியாக வந்த விருப்பத்துக்குரிய

ஒரு பண்பாட்டைத் தொடருகின்ற திருப்

தியுடன் அங்கு புத்தகங்களை விற்பவர்

களில் பலரும் முதியவர்கள்.அநேகர்

பரம்பரை பரம்பரையாக அதனைச் செய்துவருகின்றனர். நகரவாசிகளை

விடவும் உலக உல்லாசப் பயணிகளே

அவர்களது வாடிக்கையாளர்கள்.


கொரோனா பெருந் தொற்று நோய்க் காலத்தில் நகரின் சந்தடிகள் குறைந்து போனதை அடுத்து பயணிகள் மற்றும் வருமானம் தடைப்பட்டுப்போயிருந்தது. அதனால் புத்தகக்கடைகளைப் பலரும் கைவிட நேர்ந்தது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-08-2023



0 comments

Comments


You can support my work

bottom of page