நேற்றிரவு அதிர்ச்சி
பாரிஸ், ஜூலை, 18
பாரிஸில் உணவகம் ஒன்றின் வெளி இருக்கைப் பகுதிக்குள் கார் புகுந்து மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
அவர்களில் மூவர் உயிராபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாரிஸ் இருபதாவது நிர்வாகப் பிரிவில் avenue du Père Lachaise (Paris XXe) வீதியில் அமைந்துள்ள Le Ramus restaurant என்ற உணவகத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்னிரவு 19.30 மணியளவில் இடம்பெற்றது.
கார்ச் சாரதி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு விபத்துச் சம்பவம் என்ற அடிப்படையிலேயே பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் நிரம்பிக்காணப்படுகின்ற மாலை வேளை இடம்பெற்ற இந்தச் சம்பவம் அருகே உள்ள உணவகங்களில் இருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் சிகிச்சைப் பிரிவு ஒன்று உடனடியாக அங்கு நிறுவப்பட்டது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
18-07-2024
Kommentare