அப்பகுதியில் பதற்றம்
பாரிஸ், ஏப்ரல் 19
பாரிஸ் நகரின் 16 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள ஈரானியத் தூதரகத்தின் உள்ளே குண்டுதாரி எனக் கூறிக் கொண்டு ஊடுருவிய நபர் ஒருவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரை மடக்கிப் பிடிப்பதற்காகப் பொலீஸ்
கொமாண்டோக்கள் தூதரகத்தைச் சுற்றிவளைத்ததை அடுத்து இன்று பிற்பகலில் அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
அந்த இடத்தைக் கடந்து செல்கின்ற மெற்றோ ரயில் 6 வழித்தடத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. La Motte-Picquet-Grenelle மற்றும் CDG-Étoile மெற்றோ நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
கைதான நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்வசம் வெடிகுண்டோ ஆயுதங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த நபர் அப்பகுதிக்கு வரப் பயன்படுத்திய வாகனம் ஒன்றையும்
கொமாண்டோ பொலீஸார் சோதனையிட்டுவருகின்றனர் என்றும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
🔵பிந்திய செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
19-04-2024
Comentários