top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸின் அழகிய தெரு சனத்திரளால் சாதனை படைக்குமா?

புத்தாண்டை வரவேற்க

பத்து லட்சம் பேர் திரள்வர்


புத்தாண்டை வரவேற்பதற்காக

பாரிஸின் அழகிய தெருவாகிய சாம்ஸ் எலிசீயில் (Champs-Élysées) ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்

பல லட்சம் பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆண்டு என்பதால் இந்தத் தடவை அதனை வரவேற்கின்ற நிகழ்வு சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


"La Grand soir du 31 de Paris" என்று அழைக்கப்படுகின்ற அந்த வருட இறுதி நிகழ்வில் சுமார் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் பேர்வரை அலைகடலாகத் திரள்வர் என்று பாரிஸ் நகரசபை மதிப்பிட்டுள்ளது. மிக அதிகமான சனத் திரள் கூடுகின்ற ஓர் உலக சாதனை நிகழ்வாக(biggest ola in the world) அது அமையும் என்று நம்புவதாக பாரிஸ் நகரசபையின் துணை முதல்வர்களில் ஒருவராகிய எமானுவல் கிறேகுவா (Emmanuel Grégoire) தொலைக்காட்சி

நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.


பலத்த பாதுகாப்பு


இதேவேளை, நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதால் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் அனைத்தும்

தீவிர கட்டுக்காவல்களுக்கு மத்தியிலேயே நடைபெறவிருக்கின்றன.


பாரிஸ் சாம்ஸ் எலிசீ கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வருகின்றவர்கள் அனைவரும் விசேடமாக அமைக்கப்படவுள்ள நுழைவு வாயில்கள் (“Entry points”) ஊடாகவே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காணிப்பு ஏற்பாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்

என்று பாரிஸ் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல நூற்றுக் கணக்கான பொலீஸ் மற்றும் ஜொந்தாமினர் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


அதிகபட்ச பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகச் சாம்ஸ் எலிசீயை

அண்டியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதலே போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் வாகனத் தரிப்புக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

29-12-2023



0 comments

Comentarios


You can support my work

bottom of page