top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸ் மெற்றோ-14 வழித்தட ரயில் ஜூன் 24 முதல் ஓர்லி வரை நீடிப்பு

விமான நிலையத்துக்கு

விரைந்து செல்ல வசதி


பாரிஸ், மே 31


பாரிஸ் நகரில் தானியங்கி முறையில் இயங்குகின்ற மெற்றோ 14 (ligne 14) வழித்தட ரயில் சேவை மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு அதன் இரண்டு முனைகளிலும் மேலும் நீடிக்கப்படுகிறது.


ஒரு தடவையில் ஆயிரம் பயணிகள் செல்லத்தக்க இந்த நீண்ட ரயில் தடம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் வடக்கே Saint-Denis - Pleyel வரையும் தெற்கே ஓர்லி விமான நிலையம் (Orly airport) வரையும் நீடிப்புச் செய்யப்படுகிறது.


ஒலிம்பிக் காலப்பகுதியில் பாரிஸ் நகரம் எதிர்கொள்ளக் கூடிய பெரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் இலக்குடன் இந்த மெற்றோ வழித்தடத்தின் நீடிப்பு வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


பாரிஸில் இரண்டாவது பெரிய விமான நிலையமாகிய ஓர்லியை நகரின் மையப் பகுதிகளோடு இணைக்கவுள்ள முதலாவது மெற்றோ ரயில் சேவை இதுவாகும். இதன் மூலம் விமானப் பயணிகள் பாரிஸ் நகருக்கும் விமான நிலையத்துக்கும் இடையே இலகுவாக மிகக் குறைந்த நேரத்தில் தங்களது போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும்.


இதேவேளை - பாரிஸ் மெற்றோ 11 வழித்தடமும் Rosny-sous-Bois வரை நீடிக்கப்படவுள்ளது. தற்சமயம் Châtelet மற்றும் Porte des Lilas நிலையங்களுக்கு இடையே செயற்படுகின்ற இந்த வழித்தடம் Porte des Lilas நிலையத்தில் இருந்து நீடிக்கப்பட்டுப் புதிதாக ஆறு தரிப்பிடங்களுடன் Rosny-sous-Bois வரை விரிவடைகிறது. ஜூன் 13 ஆம்

திகதி முதல் இது செயற்படத் தொடங்கும். அதேசமயம் -


RER E ரயில் சேவையும் விஸ்தரிக்கப்படுகிறது. தற்சமயம் Haussmann-Saint-Lazare வரை சேவையில் ஈடுபடுகின்ற அந்த ரயில் அங்கிருந்து Nanterre வரை விஸ்தரிப்புச் செய்யப்படுகிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-05-2024


0 comments

Comments


You can support my work

bottom of page