top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸில் இன்றிரவு மீண்டும் புயல் மழை எதிர்பார்ப்பு

ஒலிம்பிக் போட்டியாளர்கள்

கடும் வெப்பத்தால் பாதிப்பு


செய்ன் நதி நீர் மாசு

நீச்சல் போட்டி தாமதம்


பாரிஸ், ஜூலை 31


ஒலிம்பிக் போட்டிகளின் நான்காவது நாளாகிய இன்று செவ்வாய்க்கிழமை

இரவு பாரிஸ் பிராந்தியம் அடங்கலாக

நாட்டின் மைய வடக்குப் பகுதியில் தீவிர மழைப் பொழிவு எதிர்பார்க்கப் படுகிறது.


பாரிஸ் பிராந்தியத்தை உள்ளடக்கி Loir-et-Cher, le Loiret, l’Eure-et-Loir, les Yvelines, l’Essonne, la Seine-et-Marne, le Val-d’Oise, Paris et sa petite couronne (les Hauts-de-Seine, la Seine-Saint-Denis et le Val-de-Marne) பகுதிகளுக்கு இன்று மாலை ஆறு மணி முதல் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்பட்டிருக்கிறது.இந்தப் பகுதிகளில் 35 °C வெப்பநிலை நிலவுகின்றது. குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்க்கக் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக வீதிப் போக்குவரத்துகள் பாதிக்கப்படலாம் என்று பொலீஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.


கடந்த வெள்ளியன்று ஒலிம்பிக் தொடக்க விழா நடந்த சமயத்தில் இரவு முழுவதும் மழை நீடித்தது தெரிந்ததே. அதன் பிறகு கடந்த நான்கு தினங்களாக தலைநகர் பாரிஸிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற முக்கிய நகரங்களிலும் கனிகூல் (canicule) எனப்படுகின்ற கடும் காண்டாவன வெப்ப அலை நீடிக்கிறது.


செவ்வாய்க்கிழமை மாலை மற்றும் இரவு நேரத்தில் கடும் பொழிவுடன்

கூடிய புயல் மழை, இடிமின்னல் மழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையமாகிய மெத்தியோ பிரான்ஸ் தெரிவித்திருக்கிறது.

கடந்த சில தினங்களாக நீடிக்கின்ற வெப்பம் பாரிஸில் தங்கியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் போட்டியாளர்களைப் பாதித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள வீரர்கள் வெப்பத்தை எதிர்கொள்வதற்குப் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.


இதேவேளை, ஒலிம்பிக்

போட்டிகள் ஆரம்பமாகி நான்கு தினங்கள் கடந்துள்ள நிலையிலும் செய்ன் நதியின் நீர் தொடர்ந்தும் மாசடைந்தே காணப்படுகிறது. நதி நீரில் பக்ரீரியாப் பரிசோதனை நடந்துவருகிறது. நீண்ட தூர நீச்சல் உட்பட நதி நீரில் நடத்தப்படவிருந்த triathlon போட்டிகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுகின்றன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

30-07-2024

0 comments

Comments


You can support my work

bottom of page