🔵புதனன்று இரவு
வண்ண மயமான
🟢தொடக்க விழா
பாரிஸ், ஓகஸ்ட் 25
புதன் கிழமை இரவு நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரபல சீன நடிகரும் கராத்தே தற்காப்புக்கலை நிபுணருமாகிய ஜக்கி சான் (Jackie Chan) ஒலிம்பிக் தீபம் ஏந்தவுள்ளார்.
பிரெஞ்சு நடிகை Elsa Zylberstein, நடிகர் Jarry ஆடற்கலை நிபுணர் Benjamin Millepied ஆகியோருடன் இணைந்து ஜாக்கி சான் தீபம் ஏந்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடக்க விழா ஆரம்பமாவதற்கு முன்னராக மாலை 17.30 மணியளவில் பாரிஸ் நான்காவது நிர்வாகப்பிரிவில் உள்ள
Rue Vieille du Temple வீதி வழியாக அவர்
தீபத்தை சுமந்து செல்வார். பின்னர் தொடக்க விழா Champs-Elysées - place de la Concorde பகுதிகளுக்கு இடையே நடைபெறும்.
படம் :தொடக்க விழாவின் மாதிரி வடிவமைப்பு
Place de la Concorde பகுதியில் நிறுவப்பட்டுள்ள நான்கு மேடைகளில் தொடக்கவிழாக் காட்சிகள் இடம்பெறும். சுமார் 65 ஆயிரம் பேர் அதனை நேரில் பார்வையிட வசதியாக ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான கலைத்துவ இயக்குநர் தோமா ஜொலி (Thomas Jolly) மற்றும் ஆடல் வடிவமைப்பு நிபுணர் அலெக்சாணடர் ஏக்மன்( Alexander Ekman) ஆகிய இருவரும் கலை நிகழ்வுகளை வடிவமைத்து நெறிப்படுத்தவுள்ளனர். மூன்று மணி நேரம் நீடிக்கவுள்ள தொடக்க விழாவில் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட நாடக அரங்கக் காட்சிகள் முக்கிய இடம் பெறவுள்ளன.
4ஆயிரத்து 400 பரா ஒலிம்பிக் வீரர்கள் தொடக்க விழா அணிவகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். பாரிஸ் நகரம் பரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும். செப்ரெம்பர் 11 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறும் காலப் பகுதி முழுவதும் நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து எடுத்துவரப்பட்ட
ஒலிம்பிக் தீப்பந்தம் இன்று நண்பகல் பிரான்ஸின் கலே பகுதியை வந்தடைந்தது. பிரான்ஸின் பரா ஒலிம்பிக் வீரர்கள் 24 பேர் 12 தீப்பந்தங்களையும் பெற்றுக்கொண்டனர்.
🔵முன்னர் வந்த செய்தி https://www.thasnews.com/post/இங-க-ல-ந-த-ல-ர-ந-த-கடல-கடந-த-வர-க-றத-பர-ஒல-ம-ப-க-த-பம
தாஸ்நியூஸ் - பாரிஸ்
26-08-2024
Commentaires