வல்-து-மான் பகுதியில்
முதல் சேவை ஆரம்பம்
பாரிஸ், செப்ரெம்பர் 16
பாரிஸ் பிராந்தியத்தில் பொதுப் போக்குவரத்துக்காக முதலாவது கேபிள் கார்(cable car) வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நிர்மாண வேலைகள் பாரிஸின் புறநகரப் பகுதியாகிய வல்-து-மானில் (Val-de-Marne) இடம்பெற்றுவருகின்றன.
கேபிள் 1 எனப் பெயரிடப்பட்ட இந்த இணைப்பில் நான்கு கார்களை இயக்கும் பரீட்சார்த்தப் பணிகள் அங்கு இடம்பெற்றுள்ளன.
Créteil இல் உள்ள Pointe-du-Lac இல் இருந்து ஆரம்பித்து Limeil-Brévannes
பகுதி வரை இந்தக் கேபிள் கார் இயங்கவுள்ளது. எதிர்காலத்தில் அது
Villeneuve-Saint-Georges வரை நீட்டிக்கப்படும். 4.5 கிலோ மீற்றர்கள் நீளமான இந்தக் கேபிள் மூலம் Limeil-Brévannes இல் இருந்து Valenton
ஊடாக Villeneuve-Saint-Georges பகுதியை 18 நிமிடநேரத்தில் சென்றடைய முடியும்.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியம், வல்-து-மான் உள்ளூர் நிர்வாகம் மற்றும் அரச தரப்புக்களின் நிதியில் இந்த முதலாவது கேபிள் கார் இணைப்பு நிறுவப்பட்டு வருகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
16-09-2024
Комментарии