top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பாரிஸ் வீதிகளில் கார்களைத் தவிர்க்குமாறு பொலீஸார் வேண்டுகோள்

சுற்றுவட்டப் பாதைகள்

முற்றாக மூடப்படலாம்?

வீரர்களும் ரசிகர்களும்

பயணிப்பதால் நெரிசல்



பாரிஸ், ஜூலை 25


ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறவுள்ள நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்குப் பின்னர் பாரிஸ் பிராந்திய (Ile-de-France) வீதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

அதனால் கார்களைத் தவிர்க்குமாறு பொலீஸார் கேட்டிருக்கின்றனர்.


அதேசமயம் பாரிஸ் நகரைச் சூழவுள்ள புறச் சுற்றுவட்டார வீதிகள் (périphérique parisien) பகுதியாக அல்லது முழு அளவில் மூடப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான முடிவுகள் பொலீஸ் தலைமையகத்தில் இன்று பின்னராக நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


வெள்ளிக்கிழமை நண்பகல் ஒருமணிக்கும் மாலை ஆறு மணிக்கும் இடையில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்களும் சுமார் 250 பஸ்களில் விளையாட்டு வீரர்களும் செய்ன் நதிக் கரையை வந்தடையவுள்ளனர். இதற்காக வீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்துக்

கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று

பாரிஸ் பிராந்தியப் பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பகல் பத்து மணிக்குப் பின்னர் கார்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரிஸ் வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மூடப்படக் கூடிய பொது வீதிகளில் பஸ் சேவைகளும் தடைப்படலாம் எனத் தெரியவருகிறது. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-07-2024


0 comments

Comentários


You can support my work

bottom of page