top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பயங்கரவாதத் தாக்குதல் புரளியால் பெல்ஜியத்தில் ஃபிலிக்ஸ் பஸ் இடைமறிப்பு!

பயணிகள் வெளியேற்றம்

சந்தேகத்தில் மூவர் கைது


பிரான்ஸின் லீல்(Lille) நகரில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸ்

நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஃபிலிக்ஸ் (Flixbus) பயணிகள் பஸ் ஒன்று இடைமறிக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பயணிகள் மூவர் விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என்று பயணி ஒருவர்

வழங்கிய தகவலை அடுத்தே பெல்ஜியம் பொலீஸார் வெற்றரன் (Wetteren) என்ற இடத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்துப் பயணிகள் அனைவரையும் வெளியேற்றிச் சோதனை நடத்தியுள்ளனர் என்று

தகவல் வெளியாகியுள்ளது.


பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் பற்றிய தகவலைச் சக பயணிகள் சிலரது உரையாடலின் மூலமே தான் அறிந்து கொண்டதாக பிரஸ்தாப பயணி கூறியதை அடுத்தே பொலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். எனினும் அச்சுறுத்தலின் உண்மைத் தன்மை உடனடியாக உறுதிப்படுத்தப் படவில்லை என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவித்தது.


ஜேர்மனியில் பதிவுசெய்யப்பட்ட ஜரோப்பியக் கம்பனியாகிய ஃபிலிக்ஸ்

(Flixbus company) நீண்ட தூரப் பயணிகள் பஸ் சேவைகளை ஐரோப்பா முழுவதிலும் அமெரிக்கா உட்பட ஏனைய சில வெளிநாடுகளிலும் நடத்தி வருகின்றது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

11-01-2024

0 comments

Comentarios


You can support my work

bottom of page