top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பள்ளிச் சீருடை மாதிரி வடிவங்கள் வெளியாகின

வெள்ளை "போலோ" சேர்ட்

கடற்படை நீல ஸ்வெற்றர்

சாம்பல் நிறக் கால்சட்டை...

படம் :நன்றி  Le Figaro 

 

பாடசாலை மாணவர்களுக்குப் பொதுவான இலவச சீருடையை நடைமுறைக்குக் கொண்டுவருகின்ற திட்டத்துக்கு முன்னோடியாக நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நூறு பாடசாலைகளில் சீருடைகள் இந்த வருடத்தில் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.


இதற்கெனத் தன்னார்வ அடிப்படையில் நூறு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு செப்ரெம்பரில் புதிய கல்வியாண்டு தொடங்கும் போது சகல பிரிவு வகுப்புகளையும் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் சீருடை அணிந்து பாடசாலைக்குச் செல்லவுள்ளனர். பரீட்சார்த்தமான இந்த ஏற்பாடு மாணவர்களால் பின்பற்றப்பட்டு வெற்றியளிக்கும் பட்சத்தில் அது தேசிய அளவில் விரிவுபடுத்தப்படும்.


ஆரம்பப் பாடசாலை முதல் உயர்தரம் வரை அரசினால் முன்மொழியப்பட்ட சீருடையின் மாதிரி வடிவங்கள், நிறங்கள் தொடர்பான விவரங்களை பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. (படம்)


பிரான்ஸில் தயாரிக்கப்படும் வெள்ளை அல்லது பழுப்பு நிற'போலோ' சேர்ட்

(white or gray polo shirt) ,கடற்படை நீல வர்ண ஸ்வெற்றர் (navy blue sweater) கருமையான பழுப்பு நிற நீளக் கால் சட்டைகள் (charcoal gray pants)

ஆகியனவே ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் பொதுவான சீருடைகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. பாடசாலையின் அல்லது அது அமைந்துள்ள பிராந்தியத்தின் சின்னம்

சீருடைகளில் பொறிக்கப்படலாம்.


முதற்கட்டமாகத் தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருநூறு ஈரோ பெறுமதியான ஐந்து சேர்ட்கள், இரண்டு ஸ்வெற்றர்கள், இரண்டு முழுக்கால் சட்டைகள் வழங்கப்படும்.

இதற்கான நிதியைக் கல்வி அமைச்சும் உள்ளூராட்சி நிர்வாகங்களும் பகிர்ந்து வழங்கவுள்ளன.


தேசிய ரீதியில் அரச பாடசாலைகள் அனைத்துக்கும் பொதுவான சீருடை 2026 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அதிபர் மக்ரோன் கடந்த வாரம் எலிஸே மாளிகையில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.


பிரான்ஸில் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளைப் போன்று அரச பாடசாலைகளின் மாணவர்களுக்குப் பொதுவான சீருடை எதுவும் கிடையாது. சில தனியார் பள்ளிகள் மட்டுமே தமக்கென சீருடைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

19-01-2024



0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

You can support my work

bottom of page