top of page
Post: Blog2_Post

".. மாற்றம் இப்போது தொடங்கியது....." புதிய பிரதமர் கெய்ர் ஸ்ராமெர்

400 க்கு மேல் ஆசனங்கள்

வெற்றிக் களிப்பில்

தொழில் கட்சியினர்


தனது எம்பி பதவியை

தக்கவைத்தார் ரிஷி


பாரிஸ், ஜூலை 5


ஐக்கிய ராஜ்ஜியத்தில் 14 ஆண்டுகள் நீடித்த பழமைவாதிகளது ஆட்சி முடிவுக்கு வந்தது. எதிர்க்கட்சியான தொழில் கட்சி பெரும்பான்மை பலத்துடன் பெரு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.அந்தக் கட்சியின்

தலைவர் கெய்ர் ஸ்ராமெர் புதிய பிரதமராகப் பதவியேற்கின்றார்.


பொதுத் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு முதல் வெளியாகி வருகின்றன. 650 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தொழில் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான 326 ஆசனங்களை வென்று கடந்து முன்னேறி வருகிறது.

தொழில் கட்சிக்குத் தேசிய அளவில் 410 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நாடாளுமன்றத்தில் 346 ஆசனங்களைக் கொண்டிருந்த பழமைவாதக் கட்சி 131 வரையான ஆசனங்களையே வெல்லும் நிலையில் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது.


பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கெய்ர் ஸ்ராமெர், நாட்டில்"மாற்றம் இப்போதிருந்து தொடங்கி விட்டது" என்று பலத்த கரகோஷங்களுக்கு இடையே அறிவித்தார்.


🔵பிந்திய நிலைவரங்கள் இதே செய்தியில் தொடர்ந்தும் பதிவேற்றப்படும். இணைந்திருங்கள்..


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

05-07-2024

0 comments

Comments


You can support my work

bottom of page