top of page
Post: Blog2_Post

"மக்ரோனின் சதி..!" பிரதமர் நியமனத்தை எதிர்த்து நாடெங்கும் இடதுசாரி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்!!

"ஜனநாயகத் துரோகம்"

பேரணிகளில் கோஷம்


பாரிஸ், செப்ரெம்பர் 8


தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் நேற்று சனிக்கிழமை நாடெங்கும் முக்கிய நகரங்களில் இடம்பெற்றுள்ளன. சுமார் 150 இடங்களில் நடந்த பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.


அரசுத் தலைவர் மக்ரோன் இடதுசாரிகளைப் புறக்கணித்துவிட்டு வலதுசாரிகள் தரப்பில் இருந்து மிசெல் பார்னியரைப் பிரதமராக நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற இடதுசாரிகளது புதிய வெகுஜன முன்னணியினால் (Nouveau Front populaire) லூசி காஸ்ரெற்ஸ்

(Lucie Castets) தலைமையில் முன்மொழியப்பட்ட அரசாங்கத்தை நிராகரித்திருந்த மக்ரோன், தேர்தல் நடந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாள்களுக்குப் பிறகு மிசெல் பார்னியரைத் தன் இஷ்டத்துக்குப் பிரதமராக அறிவித்தார். அவரது செயலை "ஜனநாயகத் துரோகம்" ("trahison démocratique") என்று இடதுசாரிகள் வர்ணித்துள்ளனர்.


புதிய வெகுஜன மக்கள் முன்னணியில் இடம்பெற்றுள்ள பெரிய கட்சியாகிய La France Insoumise, "மக்ரோன் அணியினரால் ஜனநாயகத் தேர்தல்

களவாடப்பட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது. அதன் தலைவர் ஜோன் லூக் மெலன்சோன், "மக்ரோன் படையின் சதிக்கு" எதிராக வீதிகளில் அணி திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பழமைவாத வலதுசாரியான மிசெல் பார்னியரது நியமனம் 2027 ஜனாதிபதி தேர்தலில் மரின் லூ பென் அம்மையாரது வெற்றிக்கான வாய்ப்பை மேலும் உறுதி செய்துள்ளது

என்று இடதுசாரித் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.


நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் நாடெங்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களே அணி திரண்டுள்ளனர் என்று பொலீஸ் தரப்பில் மதிப்பிடப்படுகிறது. ஆனால் பாரிஸில் Bastille மற்றும் place de la Nation பகுதிகளில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் திரண்டனர் என்று பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த La France Insoumise தீவிர இடதுசாரிக் கட்சி தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-09-2024

0 comments

Comments


You can support my work

bottom of page