top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மக்ரோனின் மாதாந்த ஊதியத் தொகை விவரம் வெளியானது

முதல் தடவையாக அதிபரது

சம்பளப்பட்டியல் பார்வைக்கு


பாரிஸ், மே 17


பிரான்ஸின் அதிபர் மக்ரோனின்

மாதாந்த சம்பளத் தொகை எவ்வளவு?


அரசுத் தலைவரது சம்பள விவரப் பட்டியல் (Le bulletin de Salaire) நேற்று வியாழக்கிழமை செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி (2024) மாதம் அதிபர் பெற்றுக் கொண்ட வரிக்கழிவுகளுக்கு முந்திய சம்பளத் தொகை 14 ஆயிரத்து 586 (14 586,32) ஈரோக்கள் ஆகும். அவரது ஊதியம் முழு நேரப் பணிக்கானது («temps complet») என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் செயற்பாடாகக் குடிமகன் ஒருவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எலிஸே மாளிகை அதிபரது இரண்டு மாதங்களுக்கான சம்பளப் பட்டியலை அவருக்கு வழங்கியுள்ளது.


அரசுத் தலைவர் மக்ரோனின்

டிசெம்பர் 2023, ஜனவரி 2024 ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளப் பட்டியல்கள் கிடைத்துள்ளன என்ற தகவலை "லிபரேஷன்" பத்திரிகை வெளியிட்டுள்ளது. முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரே சில மாத கால முயற்சிகளுக்குப் பின்னர் அரசுத் தலைவரது சம்பளப்பட்டியல்களைப் பார்வைக்குப் பெற்றுள்ளார்.


பிரான்ஸில் அரச மற்றும் பொது நிர்வாக சேவைகளில் உள்ள ஒருவரது வருமானம், சொத்து என்பன தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடுவதற்கு நாட்டின்

குடிமகன் ஒருவருக்கு நிபந்தனை அற்ற உரிமை உள்ளது. அதற்கான இணையத் தளத்தில் (https://madada.fr) வேண்டுகோளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஆவணங்களைப் பார்வைக்குப் பெற முடியும் .அரச நிர்வாகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துகின்ற 1978 ஆம் ஆண்டின் இந்தச் சட்டம் பலரும் அறிந்திராத ஒரு தகவல் ஆகும்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

17-05-2024






0 comments

Comments


You can support my work

bottom of page