தமிழரசு பின்னடைவு!!
மருத்துவரது சுயேச்சை
ஓர் இடத்தை வென்றது
பாரிஸ், நவம்பர் 15
சிறிலங்கா தேர்தல் திணைக்களம் வெளியிட்ட இறுதி முடிவின் படி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அதிபர் அனுர குமார திஸநாயக்காவின் தேசிய மக்கள் கட்சி 80 ஆயிரத்து 830 வாக்கவாக்குகளை வென்று(24%) மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
பாரம்பரிய தமிழ்க்கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகியன தலா ஓர் ஆசனங்களை மாத்திரமே வெல்ல முடிந்துள்ளது. அதேசமயம் குறிப்பிடக் கூடிய வெற்றியாக மருத்துவர் ஒருவரது தலைமையிலான சுயேச்சைக் குழு ஒன்றுக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.
வடக்கின் மருத்துவத் துறைகளில் நிலவுவதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்த முன்வந்த மருத்துவர் அர்ச்சன இஇராமநாதன் என்பவர் தலைமையில்
இந்த சுயேச்சைக் குழு தேர்தலில் களமிறங்கியிருந்தது.
முழு விவரம் :
🔵தேசிய மக்கள் சக்தி (National People’s Power - NPP) – 80,830( 3 ஆசனங்கள் )
🔵இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) – 63,327 (1 ஆசனம் )
🔵அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 27,986 (1 ஆசனம் )
🔵சுயேச்சைக் குழு 17(Independent Group 17 )– 27,855 (1 ஆசனம்)
🔵ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி (DTNA) – 22,513
அதேசமயம், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அனுரவின் கட்சிக்கு அங்கு ஓர் ஆசனமே கிடைத்துள்ளது.
முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/ச-ற-லங-க-த-ர-தல-ல-ந-டள-வ-ய-ர-த-ய-ல-அன-ர-கட-ச-வ-ற-நட-ய-ழ-த-க-த-ய-ம-தல-ம-ற-ய-க-இழந-த-தம-ழ-த-த
தாஸ்நியூஸ் - பாரிஸ்
15-11-2024
Comments