புனித நீரூற்றுக் குகை
மழைநீரில் மூழ்கியது
ஸ்பெயின் செல்கின்ற
RN 135 வீதியில் விரிசல்
ThasNews ThasNews-Paris
பாரிஸ், செப்ரெம்பர் 7
லூர்து மாதா திருத்தலத்தில் மாதா சொரூபம் மற்றும் புனித நீரூற்றுக் குகை என்பன அமைந்துள்ள (la grotte et le sanctuaire de Lourdes) பகுதியை மழை வெள்ளம் நிறைத்துள்ள கட்சியையே படத்தில் காண்கிறீர்கள்.
பிரான்ஸின் தென்மேற்கு பிரணி அத்திலாந்திக் (les Pyrénées-Atlantiques) பிராந்தியத்தில் வெள்ளி இரவு பெய்த கடும் மழையை அடுத்தே லூர்து ஆலய வளாகத்தினைப் பகுதியளவில் வெள்ளம் மூடியுள்ளது. எனினும் ஆலயம் யாரத்திரியர்களுக்காகத் திறந்தே உள்ளது என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
விடாது கொட்டிய மழை Gave de Pau நதியில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே லூர்து மாதா வளாகத்தின் சில பகுதிகள் நீரில் அமிழ்ந்துள்ளன.
1858 ஆம் ஆண்டில் பிரெஞ்சுச் சிறுமி ஒருத்திக்கு கன்னி மேரி நேரில் காட்சி கொடுத்த இடம் என நம்பப்படுகின்ற
மலைப் பகுதியே La grotte de Lourdes
எனப்படுகிறது. அங்குள்ள சிறிய குகையில் ஊற்றெடுக்கின்ற புனித நீரையே மருத்துவ குணங்கள் கொண்ட
அதிசய தீர்த்தம் என உலகெங்கும் வாழும் கத்தோலிக்க யார்த்திரிகர்கள்
நம்புகின்றனர். அந்த நீரூற்றுப் பகுதியையே தற்போது மழை வெள்ளம் மூடியுள்ளது. சுத்திகரிப்புப் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இதேவேளை -
பிரான்ஸை ஸ்பெயினுடன் இணைக்கின்ற 134 தேசிய நெடுஞ்சாலையில்
(la route nationale 134) Urdos நகருக்கு அருகே நடு வீதியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியூடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன என்று பொலீஸ் தலைமையகம் இன்று காலை அறிவித்திருக்கிறது. வெள்ளப் பெருக்கினால் வீதி பிளவுண்டு இரண்டாகத் துண்டாடப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான இந்தப் பகுதியில் மாற்று வாகன ஏற்பாடுகளைப் பொலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
பிரணி அத்திலாந்திக்கின் ஐந்து மாவட்டங்கள் தொடர்ந்தும் மழை வெள்ள அபாயத்தைத குறிக்கின்ற செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் (vigilance orange) உள்ளன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
07-09-2024
Commentaires