ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்
தோன்றியுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான நிலையங்களில் கண்காணிப்பும் எதிர்ப்புகளும்
தீவிரமாகக் காணப்படுவதால்
அவரும் அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்சவும் குடும்பத்தினருடன் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்ல (seaborne escape) எத்தனிக்கின்றனர் என்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" உட்பட பல செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விமான நிலையங்களில் அதிவிசேட பிரதிநிதிகள் பயணிக்கின்ற பிரிவுகளில் பணியாற்றுகின்ற
குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள்
பணிகளில் இருந்து வெளியேறிவருகின்றனர். நாட்டை விட்டுத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு பணிகளைப் புறக்கணிக்கின்றனர்
எனக் கூறப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்சே தனது பதவி விலகல்க் கடிதத்தில் ஏற்கனவே ஒப்பமிட்டுள்ளார் என்றும் அதனை
அவர் நாளை புதன்கிழமை சபாநாயகர் ஊடாக வெளியிடுவார்
என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னராகத் தனக்கு இருக்கும்
ஜனாதிபதிக்கான விசேட பயணப் பாதுகாப்புகளைப் பயன்படுத்தி நாட்டில் இருந்து தப்பிச் சென்றுவிட
அவர் அவசரப்படுகின்றார் என்று
கூறப்படுகிறது. அவரும் அவரது
இளைய சகோதரர் பஸில் ராஜபக்சேவும் கொழும்பு விமான
நிலையத்தில் இருந்து அதிவிசேட
பிரமுகர் பிரிவின் ஊடாக வெளியேறிச் செல்ல முற்பட்டபோது
முட்டுக்கட்டைகளையும் எதிர்ப்பையும் சந்தித்தனர் என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகார மட்டங்களில் இத் தகவல் இன்னமும் உறுதிப்படுத்தப்
படவில்லை.
நிதி அமைச்சுப் பதவியில் இருந்து கடந்த ஏப்ரலில் விலகிய பஸில் ராஜபக்சே, செவ்வாய்க்கிழமை
எமிரேட்ஸ் விமானம் ஒன்றில் புறப்பட ஆயத்தமான போது தடுக்கப்பட்டார் என்று வெளிநாட்டு
செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்
கிறது. அவர் பயணம் தடைப்பட்டுத்
திருப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன.
பஸில் விமான நிலையத்தில் சக பயணிகளால் தடுக்கப்பட்டார் என்றும் அதனால் பதற்ற நிலை தோன்றியதை அடுத்தே அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்
என்பதை விமான நிலைய அதிகாரி
ஒருவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜபக்சே குடும்பத்தவர்களுக்கு இதேபோன்ற நிலைமை மாத்தளை
விமான நிலையத்திலும் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு தகவல்
வெளியாகியுள்ளது.
12-07-2022 தாஸ்நியூஸ் - பாரிஸ்
Comments