top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வைற் சேர்ச்.... "முலான் றூஷ்".. தீப்பந்தம் ஏந்திய காட்சிகள்...

விடுதி நடன அழகிகள்

வீதிக்கு வந்து முத்தம்!!


முழு விவரம் ThasNews.Com


பாரிஸ்,ஜூலை 16


பாரிஸில் ஒலிம்பிக் தீபம் நேற்று அதன்

இரண்டாவது நாள் அஞ்சலோட்டத்தின் இடையே பிரபல முலான் றூஷ் (Moulin Rouge) களியாட்ட விடுதிக்கும் வந்தது.


விடுதியின் புகழ் பெற்ற பிரெஞ்சு கான்கான் (French cancan) நடன

அழகிகள் அச்சமயம் வீதிக்கு வந்து தீப்பந்தத்துக்கு பறக்கும் முத்தம் கொடுத்து நடனம் ஆடினர். அப்போது அவர்கள் தேசிய மூவர்ண ஆடைகளில் தோன்றினர்.


இதேவேளை - இந்தக் களியாட்ட விடுதியின் அடையாளமாக விளங்கிய கோபுரக் காற்றாடி மீண்டும் அங்கு மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சேதமடைந்து வீழ்ந்த காற்றாடியைப் புனரமைத்து மீண்டும் பொருத்துகின்ற பணி கடந்த வாரம் நடைபெற்ற சமயத்தில் விடுதியின் பிரபல காபரே களியாட்டக் கலைஞர்கள் வீதிக்கு வந்து நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.பாதசாரிகளும் அங்கு திரண்ட நூற்றுக்கணக்கானவர்களும் இளம் பெண்களின் காபரே நடனக் காட்சிகளை வீதியில் - வெட்ட வெளியில் - கண்டுகளிக்க முடிந்தது.

பாரிஸில் உல்லாசப் பயணிகளைக் வருகின்ற இடங்களில் ஒன்று "முலான் றூஷ். அதன் மேற்கோபுரத்தில் எப்போதும் பிரமாண்டமாகத் தெரிகின்ற ஆலைக் காற்றாடி கடந்த மே மாதம் ஒரு நாள்

இரவுநேரத்தில்

திடீரெனப்பெயர்ந்து தரையில் வீழ்ந்த செய்தி வாசகர்கள் அறிந்ததே


இதேவேளை -

பாரிஸ் தமிழர்களால் வைற் சேர்ச் என

அழைக்கப்படுகின்ற புனித இருதயம்

தேவாலயத்தின் ( Sacré-Cœur Basilica) முன்புறப் படிக்கட்டுகள் ஒலிம்பிக் அலங்கார வண்ணங்கள் பூசப்பட்டு மிளிர்கின்றன. அதிகமான உல்லாசப் பயணிகளைக் கவர்கின்ற ஒரு மையமாகிய இந்தத்தேவாலயம் பாரிஸ் Montmartre பகுதியில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளது.


ஒலிம்பிக் தீப்பந்தம் நேற்று தேவாலய முன்றலுக்கு எடுத்துவரப்பட்டது. ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரபல நடிகை கிளோடியா ராக்போ (Claudia Tagbo)

தீப் பந்தத்தை அங்கு சுமந்து வந்தார்.

அவரோடு முப்பது நடனக் கலைஞர்கள் அங்கு நடனமாடினர். ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்தத் தேவாலயத்தை மிகப் பெரும் எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

16-07-2024




0 comments

Comments


You can support my work

bottom of page