top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வர்த்தக மையத்தில் தாறுமாறாகக் கத்தி வெட்டு! பெண்கள் உட்பட ஐவர் பலி! சிட்னியில் பரபரப்பு!!

ஒன்பது மாதக் குழந்தை

உட்பட பத்துப்பேர் காயம்


தாக்குதலாளி சுடப்பட்டார்

சமூக ஊடகங்களில் காட்சி

விரிவான செய்திக்கு ThasNews.Com


பாரிஸ், ஏப்ரல், 13


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வர்த்தக மையக் கடைத் தொகுதி ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான கத்திவெட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்படுகிறது.


ஒன்பது மாதக் குழந்தை உட்பட பத்துக்கும் அதிகமானோருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


தாக்குதலாளியைப் பொலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர் என்பதை நியூ சவுத்வேல்ஸ் பொலீஸ் (New South Wales Police) உறுதிப்படுத்தியிருக்கிறது.

சிட்னி நகரில் பொண்டி சந்தியில் (Bondi Junction) அமைந்துள்ள நாட்டின் பிரபலமான வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்திலேயே (Westfield shopping centre) உள்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. பரபரப்பான வார இறுதி நாளில் பல நூற்றுக்கணக்கானவர்கள் வணிக வளாகத்தை நிறைத்திருந்த சமயத்திலேயே கத்தியுடன் தோன்றிய நபர் ஒருவர் திடீரென அங்கு எதிர்ப்பட்ட அனைவரையும் தாறுமாறாக வெட்டித் தள்ளியுள்ளார்.

படம் :பெண் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே தனியாளாகத் தாக்குதலாளியை மடக்கி கத்தியைப் பறித்து அவரைச் சுட்டுக் கொன்றார்.

அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

 


றக்பி விளையாட்டு வீரர்கள் அணியும் விதமாக ஆடை அணிந்து தோன்றிய தாக்குதலாளி பிற்பகல் 15.30 மணியளவில் வணிக வளாகத்துக்கு வந்து அங்கு நடமாடித் திரிந்ததைக் கண்காணிப்புக் கமராக்கள் காட்டியுள்ளன.


வெட்டுக்கு இலக்கான ஒரு தாயார் மற்றும் அவரது குழந்தைக்கு தாங்கள் உதவ முயன்றனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் சிலர் கூறியுள்ளனர்.

வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான பொலீஸார் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளுடன் மீட்புப்பணியாளர்கள் நிறைந்திருப்பதைக் காட்டும் வீடியோ படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கத்தி வெட்டுக்கு இலக்கானவர்கள் வீழ்ந்து கிடந்து அலறுவதையும் நபர் ஒருவர் நீண்ட கத்தியுடன் வளாகத்தின் உள்ளே அங்கும் இங்குமாக ஓடுவதையும் காட்டும் காட்சிகளும் வைரலாகப் பரவியுள்ளன.


சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் பொலீஸார் இன்றிரவு அறிவிக்கவுள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-04-2024




0 comments

Comentarios


You can support my work

bottom of page